உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 82 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பின் புள்ளிவிபரங்கள் அறிக்கையிட்டுள்ளன.
அத்துடன் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 294 பேர் உயிரிந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்து 20 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நோயின் காரணமாக பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 35 ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 48 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது.
கொரோன காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 994ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அங்கு 15 இலட்சத்து 91 ஆயிரத்து 991 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
ரஷ்யாவில் 3 இலட்சத்து 8 ஆயிரத்து 705 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது. அத்துடன் அங்கு கொரோனா தொற்று காரணமாக 2 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 364 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 32 ஆயிரத்து 330 பேர் மரணித்துள்ளனர்.
ஸ்பெய்னில் 2 இலட்சத்து 79 ஆயிரத்து 524 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 27 ஆயிரத்து 778 பேர் உயிரிழந்துள்ளனர்
பிரான்ஸில் ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 28 ஆயிரத்து 132 பேர் மரணித்துள்ளனர்.
கனடாவில் 80 ஆயிரத்து 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 434 பேர் மரணித்துள்ளனர்.
Related posts:
|
|