உலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது!

Sunday, June 5th, 2016

உலகிலேயே விலை உயர்ந்த விமான டிக்கெட்டை எதிகாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை ரூ.53 லட்சத்திற்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ரூ.53,52,398). லண்டனில் இருந்து மெல்போர்ன் சென்று வர இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டுக்கு தி ரெஸிடென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ஏர்பஸ் ஏ380 ரக விமானத்தில் 3 அதிசொகுசு அறைகளுடன் 5 நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

125 சதுரஅடி அளவில் சிங்கிள் மற்றும் டபுள் பெட் வசதியுடன் அறைகள் ஒதுக்கப்படுகின்றன.

விமானத்தில் விலை உயர்ந்த உணவுகளை சமைப்பதற்காக சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்ட சமையல் கலைஞரும் பயணம் முழுவதும் இருப்பார்.

இதுதவிர, இந்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

அதாவது, அதிநவீன பாத்ரும், 32-இன்ச் பிளாட் எல்.சி.டி. டிவி, இரண்டாக மடிக்கும் வகையிலான டைனிங் டேபிள்கள், தோலினால் உருவாக்கப்பட்ட டபுள் சோபா ஆகியவையும் சொகுசு அறைகளில் இடம்பெறுகின்றன.

Related posts: