உணவகத்தில் வெடிவிபத்து – ஜப்பானில் 42 பேர் படுகாயம்!

Monday, December 17th, 2018

ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடி விபத்தைத் தொடர்ந்து குறித்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து சப்போரோ நகர பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: