ஈரான்  – ஈராக் எல்லையில் நிலநடுக்கம்!

Wednesday, December 13th, 2017

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் நேற்றிரவு(11) 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 25.3 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று அதற்கு முன்னதாக அதே பகுதியில் 4.7 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்படலாம் என அஞ்சப்படுகிறது.

Related posts: