இலங்கை உடன்படிக்கையின் வடிவமே எமது சமாதான உடன்படிக்கை – கொலம்பிய ஜனாதிபதி!

Sunday, December 11th, 2016
கொலம்பியாவில் சமாதான உடன்படிக்கையை அமுல்படுத்தும் போது இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் அமுல்படுத்திக்கொண்ட சமாதான உடன்படிக்கை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்ததாக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ள கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மெனுவேல் சென்டோஸ் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசை பெறுவதற்காக நோர்வேயின் ஒஸ்லோ நகருக்கு சென்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தமது நாட்டின் சமாதான உடன்படிக்கை இலங்கை சமாதான உடன்படிக்கையின் வடிவமாக இருந்த போதிலும் கொலம்பியாவுக்கு ஏற்ற வகையில் அதனை கையாண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கொலம்பிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் சமாதான உடன்படிக்கையை அவ்வப்போது ஆராய்ந்து செயற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வருடங்களுக்கு மேலாக ஃபாக் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களுடன் நடைபெற்ற மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாக கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மெனுவெல் சென்டோஸூக்கு இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

presidente-santos

Related posts: