இராஜதந்திர வளாகங்களுக்குள் பிரவேசிக்க ரஷ்யா அனுமதி கோரல்!

Wednesday, July 19th, 2017

அமெரிக்காவினால் சுவீரிக்கப்பட்ட ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திர வளாகங்களுக்குள் பிரவேசிக்க ரஷ்யா அனுமதி கோரியுள்ளது.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோ, அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலாளர் தோமஸ் சனொனை சந்தித்த போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த வருடம் ஏற்பட்ட ராஜதந்திர முறுகலை அடுத்து, அமெரிக்காவில் உள்ள இரண்டு ரஷ்ய தூதரகங்களையும் அமெரிக்கா சுவீகரித்ததுடன், 35 ரஷ்ய ராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டிருந்ததாக தெரிவித்து ஒபாமா நிர்வாகத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

Related posts: