இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் – ஜோ பைடன் தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022

பொருளாதார பலத்தால் முட்டி மோதும் அமெரிக்கா மற்றும் சீன அதிபர்கள் இடையே இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வோஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த வாரம் சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஒரு போதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறிய பைடன் விரைவான வளர்ச்சியில் இருந்து நிலையான வளர்ச்சிக்கு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிப்புற்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பெரும்பாலான COVID-19 அறிகுறிகளிலிருந்து குணமடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இந்த வாரம் பணிகளை மீண்டும் முழுமையாகத் தொடரத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

000

Related posts: