இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் –  இருவர் பலி!

Sunday, December 17th, 2017

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் அருகே நேற்று(15) நள்ளிரவில் பலமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இதனால், கடலில் 2 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்றிரவு 11.47 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த இந்த நிலநடுக்கம் ரிச்ட்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் ஒருவரும் 80 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Related posts: