இந்திய மீனவர்கள் முறையற்ற விதத்தில் கைது -ஸ்டாலின்!

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தொடர்ச்சியாக தாக்குவதாகவும் அவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்வதாகவும் அத்துடன் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்வதாகவும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை குறித்து இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை மனித உரிமைகளை மதிக்கும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார். மீனவர்களை கைது செய்துள்ளமையால் அவர்களின் குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாவதாகவும் அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இந்தியாவும் இலங்கையும் மீனர்கள் தொடர்பில் செய்து கொண்ட உடன்படிக்கைகளுக்கு இலங்கை செவி சாய்க்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|