இத்தாலியில் மீண்டும் கொரோனா: நேற்றும் 600 பேர் பலி!

Tuesday, March 24th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இத்தாலியில் அதிகளாவான மரணங்கள் நேற்று சம்பவிதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நேற்று மாத்திரம் 602 பேர் மரணமாகினர். இதனையடுத்து அங்கு கொரொனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 6078 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று இளைப்பாறிய 4000 தாதியர்களும், 500 வைத்தியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைளில் இணைந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 335 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். அங்கு காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் இதுவரை 2000 பேர் வரை இறந்துள்ளனர். சர்வதேச ரீதியில் இந்த தொற்றினால் இறந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

340, 000 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு அந்த தொற்று பரவியது இரண்டு லட்சம் பேருக்கு அடுத்த 11 நாட்களில் இந்த தொற்று பரவியுள்ளது.

மூன்று இலட்சம் பேருக்கான தொற்று கடந்த நான்கு நாட்களில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இன்னமும் சமூக இடைவெளி மூலம் இந்த தொற்று பரவலை தடுக்கமுடியும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

Related posts: