இணைந்திருப்பதே ஐரோப்பியர்களின் விருப்பம்!

Tuesday, June 21st, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருப்பதையே பெரும்பாலாலான ஐரோப்பியர்கள் விரும்புகின்றனர் என்று ஜெர்மானிய பவுண்டேசன் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இதனால் ஆதாயமா இல்லையா என்பதில் அவர்கள் சமமாக பிரிந்துள்ளனர். பிரித்தானியா வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 44 சதவீதத்தினரும், வெளியேற வேண்டும் என்று 22 சதவீதத்தினரும் தெரிவித்திருக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகளிலுள்ள வாக்காளர்களிடம், இவ்வாறு உறுப்பினராக இருக்க நடத்தப்படும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்று பெர்டெல்ஸ்மான் பவுண்டேசன் கேட்டுள்ளது.

பிரித்தானியாவில் கருத்து தெரிவித்தவர்கள் தவிர பிறர் இணைந்திருப்பதையே ஆதரித்தனர். ஆனால் இரண்டிற்கும் மிக குறைவான வித்தியாசமே இருக்கிறது.

பிரான்சிஸில், பிரிட்டன் வெளியேறுவதற்கு 48 சதவீதத்தினரும், இணைந்திருக்க வேண்டுமென 52 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

Related posts: