ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அமெரிக்க தளபதி: அதிபர் எர்துவான் குற்றச்சாட்டு!

Saturday, July 30th, 2016

துருக்கியில் இரு வாரங்களுக்குமுன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு திட்டம் தீட்டியவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக மூத்த அமெரிக்க தளபதி ஒருவர் மீது அதிபர் எர்துவான் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அதிபர் எர்துவானின் இந்த குற்றச்சாட்டுக்கள் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மூத்த தளபதியான ஜெனரல் ஜோசப் வோட்டல் மீது எழுப்பப்பட்டுள்ளன.தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குபின், துருக்கி ராணுவ அதிகாரிகளின் களையெடுப்பு நடவடிக்கைகள் ராணுவ ஒத்துழைப்பிற்கு சேதம் விளைவிக்கும் என ஜோசப் வோட்டல் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னர், துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம், சதிக்கு திட்டம் தீட்டியவர்கள் பயன்படுத்திய விமான தளம் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குபின், நூற்றுக்கும் மேற்பட்ட துருக்கி ராணுவ தளபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: