அமெரிக்க கப்பலின் பாதுகாப்புக்கு யுத்தக் கப்பலை அனுப்பியது ஜப்பான்!

Wednesday, May 3rd, 2017

அமெரிக்காவின் விநியோக கப்பல் ஒன்றுக்கு பாதுகாப்பு வழங்க ஜப்பான் தனது மிகப்பெரிய போர் கப்பலை நிறுத்தி இருப்பதோடு ஆயுதங்களை பயன்படுத்தவும் அதிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் ஜப்பான் இவ்வாறானதொரு இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

பிராந்தியத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு எரிபொருள் நிரப்ப வரும் அமெரிக்க விநியோகக் கப்பல் ஒன்றுக்கு பாதுகாப்பாகவே ஜப்பானின் ஹெலிகொப்டர் தாங்கி இசுமோ கப்பல் செல்கிறது.இந்த கப்பல்களில் கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பப்பட்ட கார்ல் வின்சன் விமானதாங்கி கப்பல் குழு அடங்குகிறது.

கார்ல் வின்சன் விமானதாங்கி கப்பலை மூழ்கடிப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்திருப்பதோடு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு சோதனைகளை நிறுத்தும் படி அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையிலும் கடந்த சனிக்கிழமை அந்த நாடு தோல்வி அடைந்த ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது.

259 மீற்றர் நீளம் கொண்ட இசுமோ போர் கப்பல் ஒன்பது ஹெலிகொப்டர்கள் கொண்டதாகும். இந்த கப்பல் தெற்கு டோக்கியோவின் யொகோசுகா தளத்தில் இருந்து புறப்பட்டு அமெரிக்க விநியோக கப்பலுடன் இணைவதாக கியோடோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

Related posts: