அமெரிக்காவில் பனிப்புயல் – 800 விமானங்கள் இரத்து!

Saturday, December 29th, 2018

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசியதன் காரணமாக 800 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. 6500க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

குறிப்பாக வடக்கு டகோட்டாவில் உள்ள பார்கோ விமான நிலையம் மூடப்பட்டு, அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான பயணிகள் வெளியூர் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். பனிப்புயல் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: