அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் குறைப்பு : புதிய சிக்கலில் வெளிநாட்டவர்கள்!

தாய் நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று தற்போது நிரந்தரமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதிவியேற்றதினை அடுத்து வெளிநாட்டு கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதால் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் முயற்சியில் அந்த நட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்காவிற்கு சென்று குடியேறுபவர்களுக்கு பணிபுரிவதற்கு வசதியாக 10 இலட்சம் பேருக்கு கிரீன் கார்ட் வழங்கப்படுவதுடன், 5 இலட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகின்றது. குறித்த முறைமையில் மாற்றத்தினை கொண்டுவர டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருக்கும் இலங்கை மற்றும் இந்திய மக்கள் பெருமளவில் பாதிக்க கூடும் எனவும், அவர்கள் குடியுரிமை பெற முடியாத நிலை ஏற்படும் என்றும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|