அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 7 பேர் பலி

Friday, February 1st, 2019

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல மாநிலங்களின் வழமை நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிர் நிலவி வருவதால், அமெரிக்காவில் 2 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்டார்டிக்காவின் பகுதிகளை விடவும் அதிக குளிராக சிகாகோ இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதங்களை கட்டுப்படுத்த அந்த பகுதியில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தட்பவெப்பநிலையானது, -30 பாகை செல்சியஸ் என கணிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு அடுத்த வார இறுதியில், மேலும் கடும் குளிரை 20 மில்லியன் அமெரிக்க மக்கள் அனுபவிப்பர் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: