அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ள சீனா!

Monday, August 14th, 2017

வடகொரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாட்டை மாறு பரிசீலனை செய்யுமாறு சீனா கோரியுள்ளது

தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை நீக்கி அரசியல் உடன்பாட்டிற்கு வருவதற்கு ஏற்ற வகையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சர், வாங் யி கூறியுள்ளார்

அவருடன் இணைந்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரும் அதேகோரிக்கையினை முன்வைத்துள்ளார். பொறுமையை டொனால்ட் ட்ரம்ப் கடைப்பிடிக்க வேண்டும் என ரஸ்யா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், பிரான்ஸ் ஜனாதிபதி இமேனுவல் மெக்ரோனும் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் அமெரிக்கா உட்பட அமெரிக்கா சார்பான நாடுகள் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளை பிரயோகிக்க தயார் நிலையிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: