ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றது!
Monday, March 4th, 2019ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.
டுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கையிடப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த 09 மாதங்களுக்கு பின்னரே இலங்கைக்கு முழு உறுப்புரிமை கிடைத்துள்ளது.
உரிய காலத்தில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் இடம்பெறாமை காரணமாக இலங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்காணிப்பு மட்டத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆக்ரோஷத்துடன் பந்துவீசுவேன்’.. – ரியாஸ் ஆவேசம்!
அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் - உலக மக்களுக்கு பாப்பரசர் ...
நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர்...
|
|