இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை செயற்படமாட்டாது –  கடற்படைத்தளபதி!

Tuesday, January 31st, 2017

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையின் தரையிலோ, கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன உறுதியளித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், நேற்று புதுடெல்லியில் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கடற்படைத் தளபதியிடம், சீன நீர்மூழ்கிகள், கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்றமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த  கடற்படைத் தளபதி, ‘இலங்கையின் தரையிலோ, அதனைச் சுற்றியுள்ள கடலிலோ இந்தியாவின் நலன்களுக்கு எதிரான எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என்று இந்தியாவுக்கு உறுதியளிக்கிறோம். இலங்கையில் சீனாவின் தலையீடுகள் முற்றிலும் பொருளாதார காரணங்களுக்கானதே. சீனாவின் முதலீட்டில், அமைக்கப்படும் கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படை வசமே இருக்கும். சீனர்களின் பாதுகாப்பில் அது இருக்கும் என்று பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

NAVY-e1418338098668

Related posts: