90-களில் ஆட்டமிழக்கும் கருணாரத்னே: காரணம் என்ன?
Monday, October 9th, 2017இலங்கை அணி வீரர் கருணாரத்னே தொடர்ச்சியாக நூலிழையில் சதங்களை தவறவிடும் நிலையில், அவரிடம் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அணியின் பேட்டிங் பயிற்சியாளர் திலகரத்னே தெரிவித்துள்ளார்..
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை வீரர் கருணாரத்னே அபாரமாக விளையாடி 196 ஓட்டங்கள் குவித்தார்.
நான்கு ஓட்டங்கள் எடுத்தால் இரட்டை சதத்தை எட்டியிருக்கலாம் என்ற நிலையில் அவர் அவுட்டானார்.இதே போல முதல் டெஸ்ட் போட்டியிலும், 93 ஓட்டங்களில் அவுட்டான கருணாரத்னே நூலிழையில் சதத்தை தவறவிட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் 97 ஓட்டங்களில் அவுட்டாகி சதமடிக்க தவறினார் கருணாரத்னே.இப்படி தொடர்ந்து சில ஓட்டங்களில் சதங்களை தவறவிடுவது கருணாரத்னேவுக்கு தொடர்கதையாகி வருகிறது.
இது குறித்து இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹசன் திலகரத்னே கூறுகையில், கருணாரத்னே சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.90-களில் அவர் அவுட் ஆவது தொடர்ந்து நடக்கிறது. ஏன் அந்த தவறு நடக்கிறது, அந்த சமயத்தில் அதை எப்படி திருத்தி கொள்ளலாம் என அவருக்கு ஆலோசனையும், பயிற்சியும் வழங்கி வருவதாக கூறியுள்ளார்.
Related posts:
|
|