9 வருட கிரிக்கட் வாழ்வில் பார்க்காததை பாகிஸ்தானில் கண்டேன் – திசர பெரேரா

Wednesday, November 1st, 2017

பாகிஸ்தானுடன் இடம்பெற்ற இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்று பிற்பகல் இலங்கை திரும்பியது.மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்  தனது 9 வருட கிரிக்கட் வாழ்வில் தனக்கும் தனது அணிக்கும் இதுவரை கிடைக்காத பாதுகாப்பொன்று பாகிஸ்தானில் வழங்கப்பட்டதாக இலங்கை இருபதுக்கு இருபது அணித்தலைவர் திசர பெரேரா தெரிவித்திருந்தார்.குறித்த போட்டி தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு திசர பெரேரா இதனை தெரிவித்திருந்தார்.

Related posts: