41ஆவது தேசிய மட்ட கராத்தே யாழ்.வீராங்கனைக்கு பதக்கங்கள்!

Wednesday, November 2nd, 2016

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் (ளுசடையமெய முயசயவந னுழ குநனநசயவழைn) 41அவது தேசியமட்ட கராத்தே போட்டிகள் அண்மையில் கொழும்பு சுகதாச உள்ளரங்கத்தில் நடைபெற்றது. அதில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்தப்போட்டிகளில் பங்கெடுத்தனர்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலான போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி.மாலதிமுரளி குமிதே (சண்டை) போட்டியில் 2ஆம் இடத்தையும் காட்ட போட்டியில் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்டத்தில் பங்குபற்றியிருந்தார். இவருடன் பங்குபற்றிய பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தைச் சேர்ந்த திருமதி.ஜெயந்தினி பிரபாகரன் காட்டப்போட்டியில் 3ஆம் இடத்தையும் பெற்றார். மேலும் இந்தப்போட்டிகளில் பருத்தித்துறை தற்காப்புக் கலையக பிரதான பயிற்றுவிப்பாளர் இரட்ண சோதி மாஸ்டரின் (சோதி மாஸ்டர்) கீழ் அவர்கள் கலந்து கொண்டனர்.

14bfa6bb14875e45bba028a21ed38046_1463374521-s copy

Related posts: