32 வயதில் ஓய்வுபெற்ற மரியா ஷரபோவா!

Thursday, February 27th, 2020

5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல் காயங்கள் தனக்கு பெரும் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அவர் தோள்பட்டை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

தனது 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார்.

திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், உடல் தகுதி தொடர்பான பிரச்சினைகள், சில சர்ச்சைகள் போன்ற பல காரணங்களால் தலைப்பு செய்திகளில் அடிக்கடி இடம்பெற்றுவந்த மரியா ஷரபோவா, அவரது அழகுக்காகவும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் பேரழகி என்றும் இவர் புகழப்பட்டார்.

Related posts: