300 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் டோனி!

Thursday, August 31st, 2017

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் காப்பாளர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

2009-ம் ஆண்டில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.  மேலும், சர்வதேச தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி பலமுறை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தோனி, நாளை தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக தோனி நின்றார். 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை கணக்கில் கொண்டு தோனி தனது பழைய ஆட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக விளையாட்டு நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related posts: