3 நிமிடங்களில் 6 தடவைகள் வீழ்த்தப்பட்டார் ரொனால்டோ!

உலகக்கிண்ணத் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோவின் மீதுதான் மொராக்கோ அணியின் முழுக் கவனமும் குவிந்திருந்தது. அவரை முறையற்ற விதத்தில் வீழ்த்தி ரொனால்டோவினதும் போரத்துக்கலினதும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே மொராக்கோ அணியின் வீரர்கள் மூச்சாக ஈடுபட்டனர்.
ஆட்டம் ஆரம்பித்த முதலேயே ரொனால்டோ மீது மொராக்கோ வீரர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் ரொனால்டோ கோலைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து ரொனால்டோ மீதான மொராக்கோவின் கவனம் பலமடங்கு அதிகரித்தது.
முதல் பாதியில் இடைப்பட்ட 3 நிமிடங்களில் 6 தடவைகள் ரொனால்டோ வீழ்த்தப்பட்டமை பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. போர்த்துக்கல் அணியின் வீரர்களும் அவ்வப்போது சில முறையற்ற ஆட்டங்களை கைக்கொள்ளவே செய்தனர். எனினும் மொராக்கோ அணியின் வீரர்கள் வெளிப்படுத்திய அளவுக்கு மோசமானதாக அது அமையவில்லை.
Related posts:
|
|