2024இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த 2,360 கோடி செலவிட தயார்-பிரான்ஸ்!

Tuesday, September 20th, 2016

 

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சுமார் 2,360 கோடிநிதியை  செலவிட தயார் என பிரான்ஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. எனினும், இப்போட்டிகளை எந்த நாட்டில் நடத்தப்படும் என இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை தலைநகரான பாரீஸில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக, பாரீஸில் நவீன விளையாட்டு அரங்கங்கள் கட்டுவதற்கும் மற்றும் தற்போதுள்ள விளையாட்டு மைதானங்களை புதுபிக்கவும் சுமார் 145 மில்லியன் யூரோ(23,60,14,64,458 இலங்கை ரூபாய்) நிதி ஒதுக்க பாரீஸ் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி மன்றத்தில் மேயரான Anne Hidalgo முன்னிலையில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஹங்கேரி, அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில் தற்போது பிரான்ஸ் நாடும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

எனினும், 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முன்வரும் நாடுகளில் இருந்து இறுதியாக ஒரு நாட்டை தெரிவு செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(IOC) எதிர்வரும் 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: