2019 சர்வதேச மெய்வாண்மை விளையாட்டுத்தொடர் டோஹாவில்!

Tuesday, May 8th, 2018

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி கட்டாரில் சர்வதேச மெய்வாண்மை வெற்றிக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

கட்டார் – டோஹாவிலுள்ள ஹலிபா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டித்தொடரினை செப்டெம்பர் மாதம் 28ம் திகதி முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை நடத்துவதற்குதிட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த போட்டித் தொடரில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காலையில் நடைபெற இருந்த போட்டிகள் சில குறிப்பிட்ட நேரத்தில் நடத்தப்படமாட்டாது என்றும் வெப்ப காலநிலையைக்கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மெய்வாண்மை சம்மேளனம் அறிவித்துள்ளது.

400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியையும், நள்ளிரவில் மரதன் போட்டியொன்றையும் 1500 மீற்றர், 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts: