132 கோடி இந்திய ரசிகர்களை கண்ணீர் சிந்தவைத்த சைமென்ஸ்!

Saturday, April 2nd, 2016
உலக கிண்ண 20-20 கிரிக்கெற் தொடரில் அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தமையால் இறுதிப் போட்டிககு இந்திய அணி செல்லும் என்று எண்ணியிருந்த இந்திய ரசிகர்கள் அனைவரது கனவுகளும் சிதைக்கப்பட்டன. கனவுகள் கலைவதற்கு பிரதான காரணமாக இருந்தவர் மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சைமென்ஸ்.

இந்தியாவுடன் அரையிறுதி போட்டி ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் நாட்டில் தனது வீட்டின் தொலைக்காட்சியில் உலகக்கிண்ண போட்டிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த லென்டல் சைமென்ஸூக்கு அவசர அழைப்பொன்று அந்நாட்டு கிரிக்கட் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது ,இந்தியாவுடன் இடம் பெற்ற அரையிறுதி போட்டியில் கலந்து கொள்ளவதற்காக மும்பாய்க்கு வரும்படி அழைத்தாகும்.

அவ்வாறு மும்பை வருகைதந்த சைமென்ஸ்தான் 132 கோடி இந்திய ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்து மேற்கிந்தியதீவுகள் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

Related posts: