100 பந்து கிரிக்கெட் உலகளவில் பிரபலமடையும் – குமார் சங்கக்கார!

Sunday, October 27th, 2019


இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 100 பந்து கிரிக்கெட் லீக்கை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்தத் தொடர் அடுத்த வருடம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போது உலகளவில் ரி20 கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது. 100 பந்து போட்டியை சரியான வகையில் கொண்டு சேர்த்தால் உலகளவில் பிரபலமான தொடராக மாறும் என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானும், எம்சிசி-யின் தலைவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சங்கக்கார கூறுகையில் டெஸ்ட் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், அது காலகாலமாக இருந்து வருகிறது. அதிக அளவிலான அணிகளை ஊக்குவிக்க ரி20 கிரிக்கெட் சிறந்ததாக இருக்கிறது.

அதேநேரத்தில், இங்கிலாந்தில் அடுத்த வருடம் 100 பந்து கிரிக்கெட் தொடங்கப்பட இருக்கிறது. சிறப்பாக வேலை செய்து, அதை சிறந்த வகையில் கொண்டு சென்றால், உலகளவில் கொண்டு செல்வதற்கான கிரிக்கெட்டாக மாறும்டுடு என்றார்.

Related posts: