தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் ஓய்வு!

Wednesday, August 7th, 2019


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில், 93 போட்டியில் 439 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளார்.

36 வயதாகும் ஸ்டெயின், கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். ஷான் பொல்லாக், நிதினிக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்த ஸ்டெயின், ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 262 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்து பெருமை பெற்றார்.

இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். ஏற்கனவே, டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில் ஸ்டெயினின் இந்த அறிவிப்பு தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது.

ஸ்டெயின் கடைசியாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இவர் 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்திருந்த ஸ்டெயின் காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: