இரண்டாவது ஒருநாள் போட்டி பிற்போடப்பட்டுள்ளது!

Saturday, September 28th, 2019


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்த போட்டியை எதிர்வரும் 29 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், நேற்று பெய்த கடும் மழை காரணமாக கராய்ச்சி தேசிய விளையாட்டு மைதானத்தில் நீர் தேங்கியுள்ளது.

எனவே, மைதானத்தை சீர்செய்வதற்கு இரண்டு நாட்கள் முழுமையாக தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இந்த போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் ஆலோசனையினை மேற்கொண்டதன் பின்னரே பிற்போடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று நடத்தப்படவிருந்த முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டி மழைக்காணரமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: