ஷரபோவாவின் தண்டனை குறைக்கப்பட்டது!

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டாண்டு காலத் தடையை விளையாட்டுக்கான அதியுயர் தீர்ப்பாயம் பதினைந்து மாதங்களாகக் குறைத்துள்ளது.
அவரது மேல்முறையீட்டை அடுத்து தண்டனைக் குறைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் போட்டிகளுக்கு திரும்ப முடியும். அதனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளிலும் அவர் பங்குபெற வழி ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடை செய்யப்பட்ட மருந்தான மெல்டோனியத்தை அவர் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.
உணவு ஊட்டச்சத்தாக சந்தைகளில் சுதந்திரமாகக் கிடைக்கும் அந்த மருந்தை பயன்படுத்தியதை தான் ஒப்புக்கொண்டதாக இன்றையத் தீர்ப்புக்கு பிறகு ஷரபோவா தெரிவித்தார்.
எனினும் மெல்டோனியும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ளது என்பதை டென்னிஸ் அதிகார்கள் விளையாட்டு வீரர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனவும் மரிய ஷரபோவா கூறியுள்ளார்.
Related posts:
|
|