வெற்றியை கொண்டாடிய இந்தியர்கள் சிலர் தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது!

Wednesday, June 21st, 2017

கடந்த 18ம் திகதி இடம்பெற்ற வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா அணியை 180 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.இந்த வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலும் சிலர் வான வேடிக்கைகள் வெடித்து கொண்டாடிருந்தனர்.

இதன் போது , குறித்த நபர்கள் காவற்துறையினரால் எச்சரிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் , இந்தியாவின் மத்திய பிரதேஸ் மாநிலத்தில் கிராமமொன்றில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 இந்தியர்கள் அந்த மாநில காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கிரிக்கட் விளையாட்டில் தாம் விருப்பிய அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு உரிமையுள்ள போதும், இந்த கொண்டாட்டங்களின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts: