வெறுங்கையுடன் திரும்பிய இங்கிலாந்து!

Friday, February 3rd, 2017

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல் களமிறங்கினார்கள்.

இந்நிலையில் விராட் கோஹ்லி 2 ஓட்டங்களில் வெளியேற, ராகுல் உடன் சுரேஷ் ரெய்னா கைகோர்த்தார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரெய்னா அரைசதம் கடந்தார்.

ராகுல் 22 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரெய்னா 45 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 63 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டோனி, யுவராஜ் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.

குறிப்பாக ஒரே ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 3 சிக்சர்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அவர் 10 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 27 ஓட்டங்கள் எடுத்தார்.

டோனி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் 56 ஓட்டங்கள் எடுத்தார். பாண்ட்யா 4 பந்தில் 11 ஓட்டங்களும், பந்த் 6 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்களான ஜாய் மற்றும் பில்லிங்ஸ் களமிறங்கினர். இதில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பில்லிங்ஸ் 0 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த ரூட் மற்றும் ஜாய் தங்களுடைய அதிரடியை காட்டத் துவங்கினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஓட்டம் மள மளவென எகிறியது. சிறப்பாக ஆடிய ராய் 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இதைத் தொடர்ந்து வந்த மோர்கன் 40 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியது.

இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி இறுதியாக 16.3 ஓவர்களில் 127 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் இந்திய அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சகால் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு ரன் அவுட்டிற்கு பவுலரிடம் கொடுக்காமல் மாற்றாக விக்கெட் கீப்பர் டோனியிடம் கொடுக்க, இதனால் சற்று கோபமாக காணப்பட்ட டோனி சைகையுடன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

england-team-sad-bcci_806x605_71482162722_15103

Related posts: