விராட் கோலியை தடுக்கவே இலங்கை வீரர்கள் நாடகமாடினர் –  செவாக் !

Tuesday, December 5th, 2017

3ஆவது டெஸ்டின் போது, மும்பையில் வளிமாசினை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் போட்டியில் விளையாட முடியாத நிலை இருப்பதாக குற்றம் சுமத்தினர்.

ஆனால் விராட் கோலியை 300 ஓட்டங்கள் பெறாது தடுக்கும் நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக விரேந்தர் ஷெவாக் குற்றம் சுமத்தியுள்ளார்.அவர்களுக்கு மும்பை வளிமண்டல மாசுடன் விளையாட முடியாதிருப்பின், போட்டிக்கு முன்னதாகவே கூறி இருக்கலாம். அவர்கள் இவ்வாறு செய்வது முதல் தடவை இல்லை.

2010ம் ஆண்டு தாம் 99 ஓட்டங்களைப் பெற்று, இந்தியா வெற்றி 1 ஓட்டமே தேவையாக இருந்த நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் நோபோல் ஒன்றை வீசினார் என்றும் ஷெவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: