விம்பிள்டன் ரெனிஸ்:  ஶ்ரீ 4வது சுற்றில் – சானியா ஜோடி வெற்றி!

Sunday, July 9th, 2017

விம்பிள்டன் ரெனிஸ் போட்டியில் ஜோகோவிச் ஏஞ்சலிக் கெர்பர் ராட்வன்ஸ்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

விம்பிள்டன் ரெனிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2 3-6 7-6(5) 1-6 7-5 என்ற செட் கணக்கில் பிரான்சின் சோங்காவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச் 6-4 6-1 7-6 (7-2) என்ற செட் கணக்கில் குல்பிசை (லாத்வியா) வீழ்த்தி 4-வது சுற்றை உறுதி செய்தார்.

மிலோஸ் ராவ்னிக் (கனடா) கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா)இ ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகயோரின் வீறுநடையும் தொடருகிறது.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4-6 7-6 (7-2) 6-4 என்ற செட் கணக்கில் போராடி ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) தோற்கடித்தார். இதில் ஒரு கட்டத்தில் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் 2-4 என்று பின்தங்கி தோல்வியின் விளிம்பில் தவித்த கெர்பர் அதன் பிறகு சரிவில் இருந்து மீள்ச்சி பெற்றனர்.

இதே போல் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 3-6 6-4 6-1 என்ற செட் கணக்கில் பாக்சின்ஸ்கியையும் (சுவிட்சர்லாந்து)இ ஸ்பெயினின் கார்பின் முகுருஜா 6-2 6-2 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் சோரனா கிர்ஸ்டியாவையும் சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.. வோஸ்னியாக்கி (டென்மார்க்)இ குஸ்னெட்சோவா (ரஷியா)இ கோகோ வன்டேவெஜ் (அமெரிக்கா) ரைபரிகோவா (சுலோவக்கியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் கூட்டணி 6-3 3-6 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் நவோமி பிராடி-ஹீதர் வாட்சனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Related posts: