வல்லவன் உதைபந்தாட்டத் தொடர்: குருநகர் பாடுமீனை வென்றது சென்.அன்ரனிஸ்!

Tuesday, October 4th, 2016

கழுகுகள் வி.க. நடத்தும் வடமாகாண வல்லவன் உதைபந்தாட்ட சமரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் ஒளியில் இடம்பெறும் சுப்பர் 8 சுற்றின் 1ஆவது லீக் போட்டியில் பாஷையூர் சென்.அன்ரனிஸ் வி.க. எதிர்த்து குருநகர் பாடுமீன் வி.க. மோதியது.

முதற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சென்.அன்ரனிஸ் 32ஆவது நிமிடத்தில் றஜித் முதலாவது கோலினை பதிவு செய்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் 53ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனிஸ் வீரர் கலிஸ்ரர் அதிரடியாக மேலும் ஒரு கோலினை பதிலு செய்யத் தொடர்ந்த அனல் பறந்த ஆட்டத்தில் பதிலுக்கு 67ஆவது நிமிடத்தில் பாடுமீன் வீரர் மயூரன் ஒரு கோலினை உட்செலுத்த மேலும் ஆட்டம் விறுவிறுப்பாகியது.

netkalukukal

தொடர்ந்த ஆட்டத்தில் ; சென்.அன்ரனிஸ் வி.க. வீரர் கலிஸ்ரார். (பவா) மீண்டும் ஒரு கோலினை அதிரடியாக உட்செலுத்த ஆட்டம் சென்.அன்ரனிஸ் பக்கம் சாய்ந்தது. தொடர்ந்தும் பாடுமீன் கோலினை போட முயற்சித்த போதும் சென்.அன்ரனிஸ் பின்கள வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் 3:1 என்ற கோல் கணக்கில் சென்.அன்ரனிஸ் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக கலிஸ்ரார். (பவா) தெரிவு செய்யப்பட்டதுடன் அணிக்காண பரிசினை பல நோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் த.சற்குணராஜா வழங்பி கௌரவிக்க சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் கந்தசாமி அவர்கள் பதக்கத்தினை அணிவித்தார்.

netkalukukal 2

Related posts: