வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்: மன்னார் வெற்றி!

Friday, June 8th, 2018

வடக்கு – கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்கின் சுற்றுப்போட்டி ஒன்று 4 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் வவுனியா வோரியர்ஸ் அணியை எதிர்த்து மன்னார் எப்.சி.அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் மன்னார் எப்.சி அணியின் செந்துஜன் முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார்;. அந்தக் கோலுடன் முதலாவது பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் மேலதிக கோல்கள் பதிவு செய்யப்படவில்லை. முடிவில் மன்னார் எப்.சி அணி 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக மன்னார் எப்.சி அணியின் செந்துஜன் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: