லாங்கருக்கு அச்சுறுத்தலான சுழல் ஜாம்பவான் முரளிதரன்!
Saturday, May 5th, 2018ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஜஸ்டின் லாங்கர், தனக்கு மிகவும் அச்சுறுத்தலைத் தந்த பந்துவீச்சாளர் என்று இலங்கை அணியின் சுழல்பந்துவீச்சாளர் முரளிதரனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார் லாங்கர்.
எனக்கு அச்சுறுத்தலான பந்துவீச்சாளர் என்றால் அது இலங்கையின் முரளிதரன் என்றே நான் கூறுவேன். இது சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். அதுவும் சுழல்பந்துவீச்சாளர் என்பதால் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் அவர் பலமுறை என் இரவுத் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். அவரது பந்துவீச்சு அந்த அளவுக்கு எனக்கு அச்சுறுத்தலை அளித்தது.
என் மனம் கூறும் அவரது இந்தப் பந்து உட்திரும் பல்தன்மையுடையது என்று. ஆனால் அவர் பந்தை வெளித்தள்ளும் விதம் வெளித்திரும்பல் தன்மையுடையது போல் இருக்கும். நேர்மையாகக் கூற வேண்டுமெனில் முரளியின் பந்துவீச்சை எதிர்கொள்வதென்பது ஒரு துர்சொப்பனம்தான். மிகவும் துல்லியமாக அவர் வீசியதால் அவரிடம் ஓட்டங்கள் எடுப்பது மிகக் கடினம். அதுவும் மைல் கணக்கில் பந்தைத் திருப்புவார். மேலும் அவரிடம் அபரிமிதமான ஒரு போட்டி மனோபாவம் உண்டு என லாங்கர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|