பிரெஞ்சு பட்டத்தை வென்றார் முகுருஸா!

Tuesday, June 7th, 2016

பாரிஸ், ரோலண்ட் கரொஸ் களிமண் டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் செரீனா வில்லிம்ஸை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த கார்பின் முகுருஸா முதல் தடவையாக பிரெஞ்சு பகிரங்க சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

உலக மகளிர் டென்னிஸ் வீராங் கனைகளுக்கான தரநிலை வரிசையில் முதலாம் இடம் வகிக்கும் ஐக்கிய அமெ ரிக்க வீராங்கனை செரீனா வில்லியம் ஸை இரண்டு நேர் செட்களில் (7 : 5, 6 4) வெற்றிகொண்டே ஸ்பெய்ன் வீராங் கனை முகுருஸா சம்பியன் பட்டத்தை சுவீ கரித்தார்.

இதன் மூலம் 18 வருடங்களின் பின்னர் ஸ்பெய்ன் வீராங்கனை ஒரு வர் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் சம்பியனாகியுள்ளார். இதற்கு முன்னர் ஸ்பெய்னைச் சேர்ந்த அரன்ட்ஸா சன்ச்செஸ் விக்காரியோ 1998இல் மகளிர் சம்பியனாகியிருந்தார்.

பகிரங்க டென்னிஸ் வரலாற்றில் 22 மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் பட்டங் களுடன் முதலிடத்தை வகிக்கும் ஜேர்மனியின் ஸ்டெவி க்ராவின் சாதனையை சமப்படுத்தும் கனவுடன் இறுதிப் போட்டியை 34 வயதான செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். ஆனால் அவரது கனவு 22 வயதுடைய முகுருஸாவினால் தகர்க்கப்பட்டது.

‘‘மிகச் சிறந்த வீராங்கனை ஒருவருடன் விளையாடி வெற்றிபெற்றதையிட்டு நான் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். இது எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது.

ஸ்பெய்ன் நாட்டில் பிரெஞ்சு பகிரங்க போட்டி சகலராலும் விரும்பப்படுகின்றது. எனக்கு ஆதரவு நல்கிய சகல ஸ்பானியர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக’’ என கார் பின் முகுருஸா தெரிவித்தார்.

Related posts: