றோட்டரக்ற் கழக கிரிக்கெட்: சுழிபுரம் அணி இரண்டாமிடம்!

Saturday, October 15th, 2016

கண்டி றோட்டரக்ற் கழகம் நடத்திய ரி.ஆர்.ஆர். ராஜன் ஞாபகார்த்த 14ஆவது கிரிக்கெட் போட்டியில் சுழிபுரம் றோட்டரக்ற் கழகம் 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

5 பந்து பரிமாற்றம் 6பேர் கொண்ட இப்போட்டியின் இறுதிப்போட்டிக் கண்டி அஸ்கிரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. திருகோணமலை றோட்டரக்ற் கழகத்திற்கும் சுழிபுரம் றோட்டரக்ற் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை அணி 5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ஒட்டங்களைப் பெற்று 2ஆம் இடத்தைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரசாந் 22 ஓட்டங்களையும் கார்த்திகேயன் 24 ஓட்டங்களையும் பெற்றது.

K7

Related posts: