ஆஸி அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஷேர்ன் வோர்ன்!

Thursday, December 28th, 2017

அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வோர்ன் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷேர்ன் வோர்ன், அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்றுவிப்பாளராகும் தமது உள்ளார்ந்த விருப்பத்தை, சர்வதேச விளையாட்டு ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

2019ம் ஆண்டு ஆஷஸ் தொடருடன், தற்போதைய பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் விலகிக் கொள்ளவுள்ளதாக நேற்று(26) அவர் குறித்த இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தாம் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்றுவிப்பு வழங்க எப்போதும் திறந்த மனநிலையில் இருப்பதாக ஷேர்ன் வோர்ன் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: