ரொனால்டோ சொன்ன ஆச்சரிய பதில்!

Wednesday, July 18th, 2018

போர்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரொனால்டோ, மெஸ்ஸியை தான் எதிரியாக பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கல் அணி, நாக் அவுட் சுற்றில் உருகுவே அணியிடம் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

நட்சத்திர வீரரான ரொனால்டோ இருந்த போதும், அந்தணி வெளியேறியதால், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் இவர் தற்போது விளையாடி வரும் ரியல் மாட்ரிக் அணியிலிருந்து வெளியேறப்போவதாகவும், இதற்கு காரணம் அவர் மெஸ்ஸியை விட அதிகசம்பளம்எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து ரொனால்டோ , 9 ஆண்டுகளாக விளையாடி வந்த ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி அடுத்த நான்கு ஆண்டுகள் இத்தாலியின் ஜூவன்டஸ் அணிக்காக சுமார் 130 மில்லியன் யூரோ மதிப்பிற்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கால்பந்து உலகில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ தான், இதனால் இவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ, ரசிகர்கள் மெஸ்ஸி தான் பெரிது, ரொனால்டோ தான் பெரிது என்று சண்டை போட்டுக் கொள்வர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் கணவன் மனைவிபிரிவதற்கே இவர்கள் இருவர் தான் காரணமாகினர்.

இந்நிலையில் ஜூவன்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ரொனால்டோவுக்கு இன்று மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் அவரிடம் தங்கள் எதிரி மெஸ்ஸியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

அப்போது அவர் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை, நான் யார் என்று எனக்கு தெரியும். மெஸ்ஸி நிச்சயமாக சவால் நிறைந்த வீரர் தான், நானும், அவரும் விளையாடும் போது சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் அவரை எதிரியாக பார்த்ததில்லை.

என்னால் முடிந்த அளவிற்கு என்னுடைய அணிக்கு நான் என்ன கொடுக்க முடியுமோ அதை கொடுப்பேன். இத்தனை ஆண்டுகள் ரியல் மாட்ரிக் அணிக்கு அதைத் தான் செய்து வந்தேன் என்று கூறியுள்ளார்.

Related posts: