ரியோ ஒலிம்பிக்: நுழைவுச்சீட்டு மோசடி செய்த மேலும் ஒருவருக்கு பிடியாணை!

Saturday, September 10th, 2016

ரியோவில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு சட்டவிரோதமான வகையில் நுழைவுச்சீட்டு விற்பனை திட்டம் முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் மூன்றாவதாக ஐரிஷ் பிரஜை ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிடியாணையை பிரேசிலின் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.

அயர்லாந்து தேசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விளையாட்டு இயக்குநர் மார்டின் பர்கை தாங்கள் விசாரிக்க விரும்புவதாக பிரேசில் காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர் மீதான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்திருந்தாலும் இது தொடர்பில் மேலும் எவ்வித கருத்துக்களையும் வெளியிட அயர்லாந்து தேசிய ஒலிம்பிக் கவுன்சில் மறுத்துவிட்டது.

ரியோ போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் செய்ததான குற்றச்சாட்டில் ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பேட் ஹிக்கிமற்றும் கெவின் மாலோன் ஆகிய இரண்டு ஐரிஷ் பிரஜைகள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் இருவரும் தாங்கள் தவறுகள் ஏதும் இழைக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

160817212816_tickets_rio_2016_olympic_624x351_afp_nocredit

Related posts: