ரியல் மாட்ரிட் சாம்பியன்!

Monday, May 28th, 2018

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை, ரியல் மாட்ரிட் அணி 13வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி, ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகளுக்கிடையே நடைபெற்றது. போட்டியின் துவக்கத்தில் இரு அணிவீரர்களும் பலமுறை முயன்றும் கோல்போட முடியவில்லை. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் கரீம் பென்ஜேமா கோல் அடித்து, தனது அணியை முன்னிலைப்படுத்தினார். சுதாரித்துக்கொண்ட லிவர்பூல் அணி வீரர் சாடியோ மானே 54வது நிமிடத்தில் கோல் அடித்து இரு அணிகளும் 1-1 என்ற சமநிலைக்கு வந்தது.

பாலே அபாரம் : ஆட்டத்தின் 63 மற்றும் 82வது நிமிடங்களில் ரியல் மாட்ரிட்டின் கரேத் பாலே இரண்டு அசத்தல் கோல்களை அடித்தார். லிவர்பூல் அணியால், அடுத்து கோல்களை அடிக்கமுடியாததால், ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

Related posts: