ரஷ்ய வீரர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் மூவர்!
Monday, August 1st, 2016றியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், இப்போட்டிகளில் ரஷ்ய வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகையை முடிவுசெய்யும் இறுதி அதிகாரம், மூவர் கொண்ட சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சம்மேளனங்களால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் மீளாய்வு செய்யவுள்ள இக்குழு, எந்தெந்த வீர, வீராங்கனைகள் பங்குபற்ற முடியுமென்பதைத் தீர்மானிக்கவுள்ளதாக, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு அறிவித்துள்ளது. ரஷ்ய அரசாங்கத்தினால் ஆதரவளிக்கப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை, ரஷ்யாவில் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, அந்நாட்டின் தடகள அணி தடை செய்யப்பட்டதோடு, ஏனைய வீர, வீராங்கனைகள் பங்குபெறுவதற்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே, விளையாட்டின் தீர்ப்பாய நீதிமன்றத்தினால் முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறுதி முடிவை, மூவர் கொண்ட இக்குழு எடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் முன்னர் அறிவிக்கப்பட்ட 387 பேர் கொண்ட குழுவிலிருந்து, 250 வீர, வீராங்கனைகள், றியோ ஒலிம்பிக் பங்குபற்றுவதற்கான தகுதியை இதுவரை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|