ரஷ்யாவுக்கு புரட்டிப் போட்ட உருகுவே!

Tuesday, June 26th, 2018

பிபா உலகக் கிண்ணத் தொடரில் ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் இன்று ஆரம்பித்தன. இதில் ஏ பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் மோதின.
ஏ பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் மொகம்மது சலாவின் எகிப்தை 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.
அதற்கடுத்த ஆட்டத்தில் ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது. அடுத்து நடந்த சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, தனது 100வது ஆட்டத்தில் பங்கேற்ற லூயிஸ் சுவாரஸ் கோலடிக்க 1-0 என உருகுவே வென்றது.
இதன் மூலம் தலா 2 வெற்றிகளைப் பெற்ற ரஷ்யா மற்றும் உருகுவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அதே நேரத்தில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா பிரிவு சுற்றிலிருந்து வெளியேறின.
இந்த நிலையில் ஏ பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ரஷ்யா, உருகுவே மோதின. இதில் 10வது நிமிடத்தில் சுவாரஸ் கோலடிக்க உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.
23வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேவ் சேம் சைடு கோலடிக்க உருகுவே 2-0 என முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கவானி கோலடிக்க 3-0 என உருகுவே வென்றது. இதன் மூலம் ஏ பிரிவில் உருகுவேமுதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: