ரஷீட் கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்:  சச்சின் அதிரடி !

Saturday, May 26th, 2018

ரஷீட் கான் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீட் கான், இதுவரை 21 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், தமது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்,19 வயதான ரஷட்கான் சிறந்த சுழற்பந்து வீரர் என்று தான் எப்போதும் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது 20க்கு 20 போட்டிகளில் அவர்தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று சொல்வதில் தமக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ரஷீட் கானிடம் சில துடுப்பாட்ட திறமையையும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: