மைக்கல் உதைப்பந்தாட்டம் ஊரெழு றோயல் – ஞானமுருகன் மின்னொளியில் நாளை பலப்பரீட்சை!

Friday, November 4th, 2016

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடத்திவரும் மின்னொளியிலான உதைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப்போட்டிகள் நாளை சனி, ஞாயிற்க்கிழமை மற்றும் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் மாலை 7.30 மணியளவில் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் முன்னணி கழகங்கள் பங்குபற்றும் 1ஆவது அரையிறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை கழக மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்த மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதவுள்ளது. 2ஆவது போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு இளவாலை யங்கென்றீஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணியும் 7ஆம் திகதி திங்கட்கிழமை 1ஆவது போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் 2ஆவது போட்டியில் தோல்வியடைந்த அணி மோதவுள்ளது. 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய மட்டங்களில் சாதனை படைத்த வீர,வீராங்கனைகள் மற்றும் கல்வியியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

01

VIsa copy

Related posts: