மேற்கிந்திய தீவுகளை வென்றது இலங்கை !

Friday, October 7th, 2016

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் தனது முதல் இன்னிங்ஸில் 276 ஒட்டங்களை பெற்றது.மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் விஷாஹல் சிங் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணியினர் 386 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர்.இலங்கை அணி சார்பில் கருணாரத்ன 131 ஓட்டங்களையும் குசல் பெரேரா 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 110 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் 175 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து இலங்கை அணிக்கு 66 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தனர். குறித்த இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

asd2

Related posts: